வீட்டை முதுகில் தூக்கிடுவான்
மெல்ல மெல்ல சென்றிடுவான்
ஆற்றில் நீந்தி வீட்டுடனே
அக்கரை கூட சேர்ந்திடுவான்
இரும்பை போன்றது அவன் வீடு
எவரும் அசைக்க முடியாது
குரும்புச் சிறுவர் கல்லெறிந்தால்
கொஞ்சமும் கூட அசராது
காற்றில் கூரை பறக்காது
கனத்த மழையில் ஒழுகாது
ஓட்டு வீடே ஆனாலும்
ஒருவர் தானே வசித்திடலாம்
யார் வீடு ? ஆமாம் அந்த வீடு
யார் வசிக்கும் வீடு ?
ஆமை முதுகு ஓடு
அதுவே அதற்கு வீடு !
No comments:
Post a Comment