பாடல் 1:
யானை பெரிய யானை
யார்க்கும் அஞ்சா யானை
பானை வயிற்று யானை
பல்லைக் காட்டா யானை
முறத்தைப் போல காது
முன்னால் வீசும் யானை
சிறிய கோலி குண்டாய்
சின்ன கண்கள் யானை
முன்னங்காலை மடக்கி
முட்டி போட்டு படுக்கும்
சின்னக் குழந்தை ஏற்றி
சிங்காரமாய் நடக்கும் !
--------------------------------
பாடல் 2:
யானை ஒன்னு அங்கே வருது
பாரு பாரு !
யானை கழுத்தில் மணியின் ஓசை
கேளு கேளு !
மெதுவா மெதுவா யானை நடக்கும்
அழகைப் பாரு !
ரொம்ப மென்மையான தும்பிக்கையை
நீட்டுது பாரு !
காட்டுக்குள்ளே கூட்டமாக
வாழுது பாரு !
தன் கண்ணைப்போல குட்டிகளை
வளர்க்குது பாரு !
பாகன் கையில் கம்பைக் கண்டு
அஞ்சுது பாரு !
யாரும் பாசத்தோட காசு தந்தா
வாங்குது பாரு !
தேங்காய் கரும்பு வாழை பழங்கள்
உண்ணுது பாரு !
நம்மை முதுகில் சுமந்து காட்டைச்சுற்றி
காட்டுது பாரு !
யானை ஒன்னு அங்கே வருது
பாரு பாரு !
ரொம்ப மென்மையான தும்பிக்கையை
நீட்டுது பாரு!
--------------------
No comments:
Post a Comment