Friday, 18 September 2015

லட்டு பாட்டு

வட்டமான தட்டு 
தட்டு நிறைய லட்டு 
லட்டு மொத்தம் எட்டு 

எட்டில் பாதி பிட்டு 
எடுத்தான் மீதம் லட்டு 
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு 
போட்டாள் வாயில் பிட்டு 
கிட்டு நான்கு லட்டு 
பட்டு நான்கு லட்டு 
மொத்தம் தீர்ந்ததெட்டு 
மீதம் காலி தட்டு !

No comments:

Post a Comment